பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தூத்துக்குடியில் 80 சதவீத கடைகள் அடைப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து

News image
Updated On :28 மார்ச் 2015, 5:38 am

இன்பராஜ்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தமிழகம் முழுவதும் விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சனிக்கிழமை (மார்ச் 28) முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 80 சதவீத கடைகள் சனிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

ஆனால், அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் வழக்கம்போலவே இயங்கப்பட்டன. ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் வழக்கத்தைவிட குறைவாக இயக்கப்பட்டன. மருந்தகங்கள், சிறிய அளவிலான ஹோட்டல்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல திறக்கப்பட்டிருந்தன. இதனால், இயல்பு வாழ்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.