மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் தீகுளிக்க முயற்சி

கடலூரில் நிலத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஒருவர் தீகுளிக்க முயற்சி செய்ததால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

Updated On :30 மார்ச் 2015, 7:50 am

கடலூரில் நிலத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஒருவர் தீகுளிக்க முயற்சி செய்ததால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

கடலூர் மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த தேவேந்திரன் (31) என்பவர் தனது நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். அவர் கடனை அடித்த பின்னும் கூட நிலத்தை திருப்பித் தர கடன் கொடுத்தவர் மறுத்துவருவதாக புகார் கூறி, தனது நிலத்தை மீட்டு தரும்படி மனு கொடுக்க வந்தார். அப்போது திடீர் என அவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.