புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் வெளிநடப்பு
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களை கண்டித்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தரப்படவில்லை எனக்கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் திடீரஎன பேரவையை விட்டு


ஆளும் என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களை கண்டித்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தரப்படவில்லை எனக்கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் திடீரஎன பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை கேள்விநேரம் நடைபெற்ற போது, ஆளும்கட்சி உறுப்பினர் வைத்தியநாதன் கேள்விக்கு அமைச்சர் தியாகராஜன் பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது மேலும் சில உறுப்பினர்கள் துணை கேள்விகளை கேட்பதற்கு அனுமதி கேட்டனர். பேரவைத் தலைவர் சபாபதி ஒவ்வொருவராக பேசுவதற்கு அனுமதி அளித்தார்.
அதிமுக உறுப்பினர் அன்பழகன் குறுக்கிட்டு, சபை மரபுப்படி 3 உறுப்பினர்கள் மட்டும்தான் துணைக்கேள்விகளை கேட்க முடியும். வேண்டுமென்றே அடுத்து வரும் என் கேள்வியை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக பலருக்கும் பேச வாய்ப்பு தரப்படுகிறது என கூறினார்.
இதனால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் நேரு, வைத்தியநாதன், அங்காளன், சிவா,அசோக்ஆனந்து, கார்த்திகேயன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பாலான நேரம் அன்பழகன்தான் பேசுகிறார். பிற உறுப்பினர்களுக்கு வாய்ப்பே தருவதில்லை என்று குற்றம்சாட்டினர். இதனால் கோபமடைந்த அன்பழகன் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது குறுக்கிட்ட அதிமுக பேரவை அதிமுக கட்சித்தலைவர் புருஷோத்தமன், சபையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி புறக்கணிக்கப்படுவதையும், ஆளும் கட்சி உறுப்பினர்களையும் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார். அவருடன் உறுப்பினர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோரும் வெளியேறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...