இரண்டாம் உலகப்போர் 70-வது நினைவு நாள்
இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்றதின் 70-வது ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.


இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்றதின் 70-வது ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்தது. இதன் நினைவு நாள் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர் வீரர் நினைவு சின்னத்தில் இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியா மற்றும் பிரான்சு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பிரெஞ்ச் துணை தூதர் பிலிப் ஜான்வீர் காமியாமா மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவடிவேலு ஆகியோர் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு போர் வீரர் நினைவுசின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிரெஞ்ச் முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றோர் உள்பட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...