அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நெல்லையில் சாலைமறியல்: 64 பேர் கைது

திருநெல்வேலியில் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 64 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2015, 1:11 pm

முத்துகுமார்

திருநெல்வேலியில் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 64 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இம் மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் சாலைமறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற மறியலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலர் ஆர்.சடையப்பன், மாநகரச் செயலர் செ.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 64 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.