பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மணக்குள விநாயகர் கோயில் மண்டலாபிஷேகம் அமைச்சர் ராஜவேலு பங்கேற்பு

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் மண்டலாபிஷேகத்தில் சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு பங்கேற்றார்.

News image
Updated On :19 மே 2015, 7:03 am

சுஜித்குமார்

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் மண்டலாபிஷேகத்தில் சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு பங்கேற்றார்.

மணக்குள விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி  நடைபெற்றது. அதனையொட்டி தினந்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது.  இதன் தொடர்ச்சியாக மண்டலாபிஷேகத்தில், அமைச்சர் ராஜவேலு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அவருடன் ஓவிய நுண்கலை குழுவின் தலைவர் மாலதி ராஜவேலு, புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்க செயலாளர் கோ.முருகன் சென்றனர். அதனை தொடர்ந்து அமைச்சர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் மற்றும் கோவில் குருக்கள் அவர்களை வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.