பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு: 225 இடங்களில் காலி

சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் மே 25,26 தேதிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 565 இடங்கள் நிரம்பின. மீத 525 இடங்கள் காலியாக உள்ளன என கல்லூரி

News image
Updated On :29 மே 2015, 12:56 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் மே 25,26 தேதிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 565 இடங்கள் நிரம்பின. மீத 525 இடங்கள் காலியாக உள்ளன என கல்லூரி முதல்வர் க.வணங்காமுடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி:

சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் 2015-16 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக மே 25,26 தேதிகளில் முதலாம் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அனைத்து பாடப்பிரிவுகளில் உள்ள மொத்தம் 820 இடங்களில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 225 இடங்கள் காலியாக உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 138 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இஸ்லாமியருக்கான பிரிவில் 19 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 28 இடங்களும்,

தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் 19 இடங்களும், மலைவாழ் மக்களுக்கான பிரிவில் 4 இடங்களும், தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியினருக்கான பிரிவில் 15 இடங்களும் காலியாக உள்ளன. மேற்கண்ட காலியான இடங்களுக்கு வருகிற ஜூன் 1 முதல் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ள 2,3 மற்றும் 4-ம் கட்ட கலந்தாய்வின் போது மதிப்பெண்கள் அடிப்படையிலும், அரசு விதிமுறைகளின் படியும் நிரப்பப்படும். கடந்த மே 18-ம் தேதி வரை விண்ணப்பித்திருந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர் என கல்லூரி முதல்வர் க.வணங்காமுடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.