பள்ளிபாளையம் காவிரி ஆறு ரயில் பாலத்தில் வெடிகுண்டு போன்ற தோற்றம் உடைய இரண்டு பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கபட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆறு ரயில் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ரயில்வே ஊழியர் ரவிபிரசாத் என்பவர் ரயில் பாதையை ஆய்வு செய்தார். அப்போது ரயில் பாலத்தின் மையத்தில் விளக்கு போன்ற திரியுடன் கருப்பு நிறத்துடன் இரண்டு வெடிபொருள் தோற்றத்துடன் இருந்ததை பார்த்தார்.
இதுகுறித்து அவர் ஈரோடு ரயில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு ரயில்வே போலீஸார், பள்ளிபாளையம் போலீஸார், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணி்ப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வெடி குண்டு நிபுணர்களை வரவழைத்து ரயில் பாலத்தின் மையத்தில் இருந்த வெடி போன்ற தோற்றம் உடைய பொருட்களை மீட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தனி அறையில் வைத்து பிரித்து பார்க்கும் போது அதில் உள்ளே மணல் இருந்ததை கண்டு பிடித்தனர்.
என்ன காரணத்திற்காக, வெடிகுண்டு போன்ற பொருட்கள் பாலத்தில் வைத்தார்கள், யார் வைத்தார்கள் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

