மும்பையில் நின்றுகொண்டிருந்த ரயிலின் மேல் ஏறி, செல்ஃபி எடுக்க முயன்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தான்.
மத்திய ரயில்வேயின் கீழ் உள்ள நாகூர் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் இச்சம்பவம் நடைபெற்றது.
புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார் சாகில் சி ஈஸ்வர்கர். இரு நாள்களுக்கு முன்பு சாகிலின் தந்தை அவருக்கு ஒரு புதிய மொபைல் போன் பரிசளித்தார்.
அந்த புதிய மொபைல் போனில் படம் எடுப்பதற்காக சாகில் தனது நண்பர்களுடன் ரயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட விபரீத ஆசையால், ரயிலின் மேற்கூரையின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அங்கு சென்ற 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்த கம்பியை எதிர்பாராதவிதமாக தொட்டார் சாகில்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
செல்ஃபி மோகத்தால் இப்பகுதியில் இறக்கும் இரண்டாவது நபர் சாகில் ஆவார். கடந்த ஜனவரி மாதம் இதே பகுதியில் கல்லூரி மாணவர் கணேச் கும்கும்வதி செல்ஃபி எடுக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

