4 கட்சிகள் கூட்டணி இன்று அறிவிப்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்பு
மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு திங்கள்கிழமை (அக்.5) வெளியிடப்பட உள்ளது.


மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு திங்கள்கிழமை (அக்.5) வெளியிடப்பட உள்ளது.
மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் என்ற பெயரில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன.
காவிரி பிரச்னை, ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரங்களில் இந்தக் கட்சியினர் இணைந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
பின்னர், 5 கட்சியினரும் இணைந்து வரும் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். ஆனால், 5 கட்சி கூட்டணியில் இடம்பெறப் போவதில்லை என்று மனித நேய மக்கள் கட்சி திடீரென அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் திருவாரூரில் திங்கள்கிழமை (அக்.5) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 4 கட்சி கூட்டணியை அறிவிக்கப் போவதாக வைகோ அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்குமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.
விசிக பங்கேற்பு: இது தொடர்பாக விசிக செய்தி தொடர்பாளர் வன்னி அரசு கூறியது: 4 கட்சி கூட்டணி அறிவிப்பு நிச்சயம் வரும். கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார். இதில் ஊசலாட்டம் எங்களுக்கு இல்லை. இந்தக் கூட்டணி உருவாக்க ஆரம்பத்தில் இருந்து நாங்கள்தான் முயற்சித்தோம். அதனால் கூட்டணியில் தொடருவோம் என்றார்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றுச் சக்தியாக இருப்போம் என்று இந்தக் கூட்டணிக் கட்சியினர் அறிவித்துச் செயல்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...