மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற போலீஸ் சார்பு ஆய்வாளர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை சார்பு ஆய்வாளர் உயிரிழந்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை சார்பு ஆய்வாளர் உயிரிழந்தார்.
கூமாப்பட்டி, ராமசாமியாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சி.பாலு (65). இவர் ரயில்வே பாதுகாப்புப் படையில் சார்பு ஆய்வாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். திங்கள்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கல்லூரி அருகே சாலையை குறுக்கே கடந்துள்ளார்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர்-வன்னியம்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஜான் சாமுவேல் மகன் டேனி (28) என்பர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாலு மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பலத்த காயமுற்ற டேனி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணன்கோவில் போலீஸில் பாலு மனைவி செல்லம்மாள் (58) கொடுத்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த டேனி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...