விருதுநகரில் இளைஞர் எழுச்சி நாள் பேரணி
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி விருதுநகரில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்ற இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடைபெற்றது.


முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி விருதுநகரில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்ற இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடைபெற்றது.
அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்படி, விருதுநகர், கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளி முன்பு இப் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், வீட்டுக்கு வீடு மழை நிர் சேகரிப்போம்-நிலத்தடி நீரைப் பாதுகாப்போம், மரம் வளர்ப்போம்-மழை பெறுவோம், இயற்கையைக் காப்போம்-மரம் வளர்ப்போம், மின்சாரத்தை சேமியுங்கள்-வீடு தோறும் ஒளியூட்டுங்கள், நம் நாட்டின் மிகச் சிறந்த அறிவுப் புதையல் வகுப்பறையின் வாயிலில் உள்ளது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி மாணவ மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியில் சென்றனர்.
பேரணி மாரியம்மன்கோவில், தெப்பம், தெற்கு ரத வீதி, மேலத்தெரு, தேவர்சிலை வழியே மீண்டு பள்ளியை வந்தடைந்தது.
பேரணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பகழேந்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன், சங்கரநாராயணன், முனியசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ஜெய அருள்பதி, ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...