ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திட்டக்குடி அருகே விபத்து: 4 பேர் சாவு

திட்டக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மதுரை விலாச்சேரியை சேர்ந்தவர்

News image
Updated On :18 அக்டோபர் 2015, 9:43 am

முத்துகுமார்

திட்டக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மதுரை விலாச்சேரியை சேர்ந்தவர் கா.பாலசுப்ரமணியன் (60), சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி மகன் சுரேஷ்(35), சென்னை வண்ணாரபேட்டையைச் சேர்ந்த லூ.ராஜா(50) ஆகியோர் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்னை-திருச்சி தேசி நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். காரை சென்னை ஜீவா நகரை சேர்ந்த குருசாமி மகன் மகேஷ்வரன் (40) ஓட்டிச் சென்றார்.

கார் ஞாயிற்றுக்கிழமை காலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ஆவட்டி கூட்டுரோடு அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியை கார் முந்திச் செல்ல முயன்றது.

இதில், காரின் முன்பகுதி லாரியின் பின்புறம் மோதியதாகத் தெரிகிறது. இதில், கார் ஓட்டுனர் மகேஸ்வரன், பாலசுப்ரமணியன், சுரேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலின் பேரில் வேப்பூர் காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ராஜா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

இந்த விபத்து குறித்து வேப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் திட்டக்குடி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளில் உடற்கூறு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.