யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நல்ல சேவைத் திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் மனதில் முதல்வர் இடம் பிடித்துள்ளார்: ஓ.பன்னீர் செல்வம்

நல்ல சேவைகள் திட்டங்கள் மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதால், 2016 -ல்  நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் கோட்டையைப் பிடிக்கும் என்று தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

News image
Updated On :24 அக்டோபர் 2015, 5:31 pm

கோ.ஜெயக்குமார்

நல்ல சேவைகள் திட்டங்கள் மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதால், 2016 -ல்  நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் கோட்டையைப் பிடிக்கும் என்று தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதிமுக 44-வது ஆண்டு தொடக்க விழா விருதுநகரில், சனிக்கிழமை இரவு கட்சியின் மாவட்டச் செயலாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திகோதண்டம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.கோபால்சாமி, வைகைச்செல்வன், மாஃபா பாண்டியராஜன், கட்சியின் மாவட்டப் பொருளாளர் மல்லி எஸ்.ஆர்.ராஜவர்மன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

 அதிமுக என்னும் பேரியக்கம் 43 ஆண்டுகால வீர வரலாற்றைப் பதிய வைத்து 44-வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 14 ஆண்டுக்கு மேல் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்து முதன்மை மாநிலமாக, முன்ணனி மாநிலமாக தமிகத்தை உருவாக்கி வைத்துள்ளார். 25 ஆண்டு காலம் ஆட்சியும் உரியைமையப் பெற்றுள்ள ஒரே கட்சி அதிமுக. 17 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த பேரியக்கத்திற்கு கருணாநிதியும் அவரது கைக்கூலிகளும் கொடுத்த இடர்பாடுகளை ஏற்றுக்கொண்டு, பல தியாகங்களைச் செய்து, சோதனைகள், வேதனைகளத் தாங்கி எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை ஒரு பெரிய ஆலமர விருட்சமாக இன்று வளர்த்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

3-ம் முறையாக 2011-ல் ஆட்சி பொறுப்பேற்று சாதனை மிகு ஆட்சியை மக்களுக்கு முதல்வர் தந்து கொண்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் 48 சதவீத நிதி சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 4 மாடுகள் அரசால் வழங்கப்பட்டது. இன்று அது 53 ஆயிரம் குட்டிகளை ஈன்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்தால் இன்று கிராமப் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

நல்ல தரமான கல்வி அரசு மூலமாய் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக 23 ஆயிரம் கோடி பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்.

தற்போது 2016 தேர்தல் குறித்து கட்சிகள் பேசி வருகின்றன. விஜயகாந்த் முதல்வர், இன்னும் யார் யாரோ முதல்வர் என்று. கேபினட் அந்தஸ்துள்ள ஒரு எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்தும், அவருக்குப் பேசத் தெரியவில்லை. பொதுக்கூட்டங்களில் நாக்கைத் துருத்தி தொண்டர்களை அடிக்கிறார். இனி விஜயகாந்த் வெற்றி என்பதை பெறவே முடியாது. திமுக, காங்கிரஸ் காலாவதியான கட்சிகள். காவேரி நடுவர் மன்றப் பிரச்னை, முல்லைப் பெரியார் பிரச்னை எதிலும் திமுக தமிழக்திற்கு நன்மை செய்தது இல்லை.

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இது போன்ற நல்லாட்சியை பார்த்ததில்லை என்று பொதுமக்களும், இந்திய தேசமே பேசும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி வருகிறார் என்றார் அவர்.

விழாவில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட அதிமுக செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.