யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: ஆட்சித் தலைவர்

விருதுநகர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 அக்டோபர் 2015, 6:37 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சித் தலைவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு மாநிலம் முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 923 நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, 1,02,754 பேர் பயனடைந்துள்ளார்கள். மழைக் காலங்களில் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

கொசுக்கள் உள்ளே புகா வண்ணம் குடிநீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் உள்ள தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் நல்ல நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.

வீட்டில் உள்ள கீழ்நிலை நீர் சேமிக்கும் தொட்டியை கொசு புகாமல் மூடி வைத்திருப்பதன் மூலமும் கொசு உற்பத்தியை தடுக்க முடியும். வீட்டில் உள்ள குளி்ர்சாதன பெட்டிகள், ஏ.சி. போன்றவைகளில் இருந்து வெளியேறும் நீர் தேங்கா வண்ணம் அகற்றிவிட வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் மஸ்தூர்கள் வீடுவீடாகச் சென்று வைரஸ் கொசுக்கள் பரவும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பள்ளி கல்வித் துறையின் மூலம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி நிலையங்களில் வைரஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது. தங்களது வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரிப்பது குறித்து எடுத்துக் கூறி, மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் சித்த மருத்துவத் துறை மூலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் பேருந்து நிலையங்கள் உள்ளிடட் இடங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் தாங்கள் சுற்றியுள்ள பகுதிகளை நீர் தேங்கா வண்ணம் பாதுகாப்பாக வைக்கவும், சுகாதாரமான முறையில் பராமரித்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நிலவேம்பு குடிநீர் வாங்கி பருகி பயன் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.