விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்: காவலரை கண்டித்து பேருந்துகள் நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தில் பயணச்சீட்டு கேட்ட நடத்துனரைத் தாக்கிய காவலரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில்

News image
Updated On :1 செப்டம்பர் 2015, 4:57 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தில் பயணச்சீட்டு கேட்ட நடத்துனரைத் தாக்கிய காவலரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளை இன்று இரவு நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு அழகாபுரி வழியே செல்லும் பேருந்து இன்று இரவு கிருஷ்ணன்கோவில் நிறுத்தத்தில் நின்றுள்ளது. அதில் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் காவலாராக வேலை செய்யும் செல்வம் என்பவர் எரிச்சநத்தம் செல்வதற்காக ஏறியுள்ளார்.

நடத்துனர் தங்கத்துரை காவலர் செல்வத்திடம் டிக்கெட் கேட்டுள்ளார். செல்வம் எடுக்க மறுத்து நடத்துனருடன் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட மோததில் காவலர் செல்வம், நடத்துனர் தங்கத்துரையை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அந்தப் பேருந்தை லட்சுமியாபுரம் விலக்கு அருகே நடத்துனர் நிறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் உடனடியாக காவலர் செல்வத்தை கைது செய்ய வலியுறுத்தி எதிரே வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காவலர் செல்வத்தைப் பிடித்து நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு போக்குவரத்துக் கழக ஊழியர்களும் சென்றனர். இதனையடுத்து போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.