ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாளையங்கோட்டையில் சிறை முற்றுகை போராட்டம்:107 பேர் கைது

பாளையங்கோட்டையில் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :4 செப்டம்பர் 2015, 8:55 am

முத்துகுமார்

பாளையங்கோட்டையில் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் ஆயுள்தண்டனை கைதிகளாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளனர். இவர்களை அண்ணா பிறந்தநாளன்று விடுவிக்கக்கோரி மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன்ஒரு பகுதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைமை வகித்த மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ரசூல்மைதீன் பேசுகையில்,  முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பத்தார் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே, இந்த ஆண்டில் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அண்ணா பிறந்தநாளில் தகுதியான சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்றார்.

இப் போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.செய்யதுஅலி, ஏ.பாரூக் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 21 பெண்கள் உள்பட 107 பேரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.