மின் ஆளுமை விருது பெற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் ஆளுமை மென்பொருள் உருவாக்கும் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு மின் ஆளுமை விருதை தகவல் தொழில் நுட்பத் துறை அறிவித்துள்ளது.
பொது மக்களுக்கான சேவையை ஏற்று நடத்தும் வகையில் மென்பொருள் பயன்பாடுகளை உருவாக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரின் சமூக பொறுப்புணர்வை மதித்து அங்கிகாரம் செய்யும் வகையில் இவ்விருது பெற நிகழாண்டில் குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் சிறந்த மின் ஆளுமை மென்பொருள் பயன்பாடு, மக்களுக்கான மின் ஆளுமை சேவைகள் வழங்கும் சிறந்த கைப்பேசிக்குரிய மென்பொருள் பயன்பாடு, சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான மின் ஆளுமை மென்பொருள் உருவாக்கியோருக்கு, ஒவ்வொரு பிரிவிலும் இரு விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான விருது மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படுகிறது.
அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். இந்த விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான உரிய படிவம் www.tnega.in என்ற இணையதள முகவரியில் உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ராமராஜன் பிரசாரம்!
சங்கரன்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

