ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற ஒருவரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 மயில்களை விஷம் வைத்துக் கொன்ற ஒருவரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள டி.மானகசேரியைச் சேர்ந்தவர் இருளாண்டி (49). இவரது ஒரு ஏக்கர் தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார். இதனை மயில்கள் வந்து திண்பதை அறிந்த இருளாண்டி, சோளத்தில் விஷத்தை தடவி ஆங்காங்கே போட்டு வைத்திருந்துள்ளார். இதனை சாப்பிட்ட 6 ஆண் மற்றும் 6 பெண் மயில்கள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்தது.
இது குறித்து அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் பாண்டியராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த மயில்களை வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தார். இவைகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருளாண்டியை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...