விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3809 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.90.36 லட்சத்திற்கு உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3809 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.90.36 லட்சத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2015, 8:29 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3809 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.90.36 லட்சத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நீதிமன்றங்களில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி மற்றும் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம் ஆகியோர் தலைமையில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.பத்மா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நம்பிராஜன், நீதித்துறை நடுவர் எண் 2 பசும்பொன் சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டனர்..

இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நகராட்சி, மின்வாரியம், தொலைபேசி, குடிநீர், சிவல் வழக்குகள், பிறப்பு-இறப்பு வழக்குகள், தொழிலாளர் துறை சம்பந்தப்பட்ட வழக்குகள் என 4008 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 3809 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.90,36,650-க்கு உத்தரவு வழங்கப்பட்டது.

மேலும் வங்கிகளில் வராக் கடன்களாக உள்ள 1315 மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 84 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.42,11,800-க்கு உத்தரவு வழங்கப்பட்டு, ரூ.5,95,750 உடனடியாக வசூலிக்கப்பட்டது. முடிவில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நிர்வாக அதிகாரி பேச்சியப்பன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.