
உடல் குண்டானதால் 125 ஊழியர்களின் வேலை பறிப்பு: ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி
ஏர் இந்தியா நிறுவனம் விமானப் பணிப்பெண்கள் உட்பட 125 ஊழியர்களை அதிக உடல் எடை காரணமாக விமானப் பணியிலிருந்து விலக்க இருக்கிறது.

ஏர் இந்தியா நிறுவனம் விமானப் பணிப்பெண்கள் உட்பட 125 ஊழியர்களை அதிக உடல் எடை காரணமாக விமானப் பணியிலிருந்து விலக்க இருக்கிறது.
இதுகுறித்து ஏர் இந்தியா வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (ஈஎஇஅ) விதிமுறைகளின்படி, பணிப்பெண்கள் உட்பட விமானக் குழுவினர் தங்கள் உடல் எடையை குறிப்பிட்ட உடல் நிறை குறியீட்டெண் (ஆஙஐ) அளவிற்குள் பராமரிக்க வேண்டும்.
ஆனால், கடந்த வருடம் இந்த விதிமுறைகளின்படி, உடல் எடையை பராமரிக்காத, அதிக உடல் எடை கொண்ட 600 ஊழியர்களுக்கு தங்கள் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்குமாறு அறிவுருத்திய ஏர் இந்தியா, அவர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பும் அளித்தது. இந்நிலையில், இத்தனை மாதங்கள் கடந்த பின்னும் உடல் எடையை பராமரிக்காத பணிப்பெண்கள் உட்பட 125 பேரை வேலையை விட்டு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இவர்களில் சிலருக்கு தரையில் இருந்தபடி (விமான நிலையத்தில்) பார்க்கும் வேலைகள் கொடுக்க இருப்பதாகவும், சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்க இருப்பதாகவும் ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






