பிரபுதேவா - சிம்ரன் நடிக்கும் கமல் ஸ்ரீதேவி!
பிரபுதேவா - சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ என தலைப்பு வைத்துள்ளனர்.
கமல் ஸ்ரீதேவி பட போஸ்டர்
பிரபுதேவா - சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ என தலைப்பு வைத்துள்ளனர்.
பிரபுதேவா - சிம்ரன் ஜோடி பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டராப்பட்டு இயக்கும் இந்தப் படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிட்டுள்ளனர்.
காதல் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி, மண்டாடி படங்களில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் 5வது படம் இது.
இப்படத்தின் தலைப்பு அறிமுக விடியோவை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் தலைப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Summary
The new film starring Prabhu Deva and Simran has been titled 'Kamal Sridevi'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


