ஆசிய சாதனையுடன் சிம்ரனுக்கு இரட்டைத் தங்கம்..! பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா!
ஆசிய பாரா விளையாட்டில் நடப்பு எடிஷனில் இரண்டாவது தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சிம்ரன் குறித்து...

தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சிம்ரன் - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்
ஆசிய பாரா விளையாட்டில் நடப்பு எடிஷனில் இந்திய வீராங்கனை சிம்ரன் ஆசிய சாதனையுடம் தனது இரண்டாவது தங்கம் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
மகளிருக்கான 100 மீட்டர் டி12 தடகள போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் 12.02 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளார். இது ஆசிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற டி12 மகளிருக்கான 200 மீட்டர் தடகளத்தில் சிம்ரன் தங்கம் வென்றிருந்தார். இத்துடன் அவருக்கு நடப்பு எடிஷனில் இரண்டு தங்கம் கிடைத்துள்ளது.
100 மீட்டர் டி12 தடகள போட்டியில் ஈரானின் ஹஜர் சஃபர்சாதே 12.30 விநாடிகளில் இலக்கைக் கடந்து, வெள்ளி வென்றார். இந்தோனோஷியாவின் நி புட்ரி 12.51 விநாடிகளில் இலக்கைக் கடந்து, வெண்கலம் வென்றார்.
டி12 என்பது மிதமான பார்வைக் குறைபாடு கொண்ட வீரர், வீராங்கனைகளைக் குறிக்கு வார்த்தையாகும். 26 வயதான சிம்ரன் கடந்த 2023 பாரீஸ் பாராலிம்பிக்ஸ் வெண்கலம் வென்றிருந்தார்.
இத்துடன் இந்தியாவுக்கு 14 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கல் உடன் 55 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்துக்கும் முன்னேறியுள்ளன.
2ï¸â£nd consecutive Gold for Simran at Asian Para Games 2026!
— Doordarshan Sports (@ddsportschannel) October 21, 2026
Simran Sharma clinches another Gold at #APG2026, winning the title in Women's 100m T12 and topping the podium for the second time in two days. #Cheer4Bharat pic.twitter.com/XLOlh1xBLh
Summary
Superb Simran grabs second Para Asiad gold with Games record in 100m T12
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


