இந்தியாவுக்கு 13ஆவது தங்கம்..! ஒரே பிரிவில் 2 பதக்கம் வென்ற இந்தியர்கள்!
ஆசிய பாரா விளையாட்டில் ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள் குறித்து...

100 மீட்டர் தடகளத்தில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள். - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்
ஆசிய பாரா விளையாட்டில் இந்தியர்கள் திலீப் கவிட், முகமது மோர்சிங்கனகாத் ஆகியோர் 100 மீட்டர் தடகளத்தில் தங்கம், வெள்ளி வென்று அசத்தினார்கள்.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஆடவருக்கான 100 மீட்டர் தடகளத்தில் டி47 பிரிவில் இந்தியரகள் இருவர் பதக்கம் வென்றுள்ளார்கள். திலீப் கவிட் 10.69 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றார்.
மற்றுமொரு இந்தியரான முகமது மோர்சிங்கனகாத் 10.72 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளி வென்றார். சீன வீரர் வெண்கலம் வென்றார்.
இத்துடன் இந்தியாவுக்கு 13 தங்கப் பதக்கம், 19 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு நான்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
டி47 என்பது ஒரு கையில் ஏற்படும் செயல்பாடு/திறன் குறைபாடு, முழங்கை அல்லது தோள்பட்டைக்குக் கீழே செயல்பட முடியாமல் இருக்கும் வீரர்/ வீராங்கனைகளைக் குறிக்கும். இதனால், ஓடும்போது அவர்களுக்கு சமநிலைக் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Gold & Silver Glory for India! ð¥
— Doordarshan Sports (@ddsportschannel) October 21, 2026
Dilip Gavit wins GOLD ð¥ and Mohammed Morssinganakath clinches SILVER ð¥ in Menâs 100m T47 at the #AsianParaGames2026!#Cheer4Bharat pic.twitter.com/B12G14Bur4
Summary
Asian Para Games: Dilip Gavit Wins Gold, Morssinganakath Takes Silver In 100m T47
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


