தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச.முருகேசன் தலைமை வகித்தார். இப்பேரவையில் இதுவரையில் நடந்த வேலை அறிக்கையினை மாவட்ட செயலாளர் நா.புகழேந்தியும், மாவட்ட பொருளாளர் நா.சீத்தராமன் வரவு, செலவு அறிக்கையினையும் தாக்கல் செய்தனர்.
இப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கதத்தின் மாவட்ட தலைவர் முத்துராஜ், மாநில செயலாளர் ச.இ.கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். இதில், மாவட்ட நிர்வாகிகள் ம.கதிரேசன், பாண்டீஸ்வரன், மீ.பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதிய மாற்ற அரசானையினை மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். கணினி இயக்குநர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவும், அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் நிறைவுரை வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் மை.பாலகுரு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

