பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

மூட்டை மூட்டையாக ஹவாலா பணம்: தமிழக தொழிலதிபருக்குத் தொடர்பு?

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 கோடி ஹவாலா பணத்தை வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On :

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 கோடி ஹவாலா பணத்தை வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

 இந்தப் பதுக்கலில் நாகர்ஜுனா என்பவருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மார்டினுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளோம் என்றும், அவர்களைத் தேடி வருகிறோம் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

 போலி லாட்டரி, ஹவாலா புழக்கம் ஆகியவை குறித்து ஐ.பி. உளவு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில் கொல்கத்தாவில் ஐந்து இடங்களில் ஆய்வு செய்தோம்.

 அப்போது 16 சாக்கு மூட்டைகள், 27 பைகள், 2 பீரோக்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கைப்பற்றினோம். அவற்றை எண்ணியதில் தற்போது வரை ரூ.45 கோடி சேர்ந்திருக்கிறது. மீதமுள்ள பணத்தையும் எண்ணினால் 50 முதல் 55 கோடி ரூபாய் வரை இருக்கலாம்.

 இந்தப் பதுக்கலுக்கு நாகர்ஜுனா என்பவருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மார்டினுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். அவர்களைத் தேடி வருகிறோம்.

 அவர்களுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.