அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

மாநில கிராம செவிலியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என மாநில கிராம செவிலியர் சங்கத்தின் செயற்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On :27 செப்டம்பர் 2015, 9:21 am

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என மாநில கிராம செவிலியர் சங்கத்தின் செயற்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் ஹாஜிபி செய்யது முகமது மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாநில கிராம செவிலியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாநில தலைவர் ப.நிர்மலா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அந்தோனியம்மாள், வே.ரூபசௌந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆயிரம் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மூடப்பட்ட துணை சுகாதார செவிலியர் பயிற்சி மையங்களை திறக்க வேண்டும். மாவட்ட தாய் சேய் நல அலுவலர்களை தேர்வு மூலம் செய்யாமல், மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

கிராம செவிலியர்களுக்கு 3 கட்டங்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட அளவில் சங்கத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.