வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லையில் ஏலசீட்டு நடத்தி ரூ. 22.40 லட்சம் மோசடி: எஸ்.பி. யிடம் கிராம மக்கள் புகார்

கீழப்பாவூர் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி பயனாளிகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ. 22.40 லட்சம் மோசடி செய்துள்ளதாக திமுக பிரமுகர் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

News image
Updated On :6 ஏப்ரல் 2016, 7:25 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: கீழப்பாவூர் கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி பயனாளிகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ. 22.40 லட்சம் மோசடி செய்துள்ளதாக திமுக பிரமுகர் மீது கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆலங்குளம் வட்டம், கீழப்பாவூர் மேலப்பட்டமுடையார்புரம் சங்கரநாராயணபுரம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறாராம்.

சங்கரநாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த ஐசக்ரத்தினசெல்வன், ஸ்டீபன், யோசப்பு, தேவராஜ், முருகேசன், ராஜகனி, ராமர், மோசஸ்ஏசுராஜா, அன்பழகன், ராஜேந்திரன், ஜேக்கப்தினகரன் மற்றும் பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்த அருளானந்தம், தங்கம், நாராயணன், தாவீதுராஜா, செல்லையா, சுப்பிரமணியம், சாலமோன்ராஜா உள்பட பலர் ராமசாமியிடம் சீட்டு போட்டுள்ளனராம்.

இந்நிலையில் 31 மாதம் ஏலச்சீட்டு முடிவடைந்த நிலையில் பயனாளிகளுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வீதம் 8 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சமும், ரூ. 80 ஆயிரம் வீதம் 13 பயனாளிகளுக்கு ரூ. 10.40 லட்சமும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ராமசாமி ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதனிடையே மேலப்பட்டமுடையார்புரம், பெத்தநாடார்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை திருநெல்வேலியில் எஸ்.பி. அலுவலகத்தில் திரண்டனர். ஏலச்சீட்டு மோசடி குறித்து ராமசாமி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செலுத்திய பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

அப்போது கிராம மக்கள் கூறியது: ராமசாமியின் மீது நம்பிக்கை வைத்து பல வருடங்களாக ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வருகிறோம். தற்போது ஏலச்சீடு முடிந்து பல மாதங்களாகியும் ராமசாமி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இது குறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

கூலி வேலை செய்து சேமித்த பணத்தில் இருந்து குழந்தைகள் படிப்பு, திருமணச் செலவுக்காக ஏலச்சீட்டு போட்டோம். ஆனால் செலுத்திய பணம் கிடைக்காமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.