எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை அருகே விபத்தில் சிவகாசி மாணவன் பலி!

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிவகாசியை சேர்ந்த மாணவன் இறந்தார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2016, 10:30 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிவகாசியை சேர்ந்த மாணவன் இறந்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தனமாரி. இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் தச்சநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தாராம்.
சந்தனமாரி மகன் கார்த்திக், தச்சநல்லூரில் இருந்து தனது உறவினர் ஆறுமுகநாதன் (21) என்பவருடன் பாளையங்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தாராம்.

முருகன்குறிச்சி அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகில் வந்தபோது, அவ்வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆறுமுகநாதன், கார்த்திக் ஆகியோரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் கார்த்திக் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

கார்த்திக் அங்குள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.