வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 62.14 அடியாக உள்ளது. 

News image
Updated On :21 டிசம்பர் 2016, 1:09 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 62.14 அடியாக உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 25 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 14 மி.மீ, சேர்வலாறு அணையில் 10 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 6 மி.மீ, கடனாநதி அணையில் 1 மி.மீ, ராமநதி அணையில் 3 மி.மீ, கருப்பாநதி அணையில் 4 மி.மீ, அடவிநயினார் அணையில் 4 மீ.மீ, கன்னடியன் அணைக்கட்டுப் பகுதியில் 3 மீ.மீ, நான்குனேரியில் 4 மி.மீ, தென்காசியில் 5.2 மி.மீ, செங்கோட்டையில் 2 மி.மீ, ஆலங்குளத்தில் 5.2 மி.மீ, பாளையங்கோட்டையில் 1 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 3 மி.மீ, சேரன்மகாதேவியில் 1 மி.மீ மழை பதிவாகியுள்ளன.
அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால், பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 238.54 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 500 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 21 கனஅடி, கடனாநதி அணைக்கு 12 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 62.14 அடியாக இருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 24.15 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 36.33 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 49.10 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 40.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 47.51 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 22.75 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 71.50 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.80 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 8.00 அடியாகவும் இருந்தது.
குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 204.75 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.