நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சி ரயில் மறியல்: 133 பேர் கைது
காஷ்மீரில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறலை கண்டித்து திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட வந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர் 133 பேர் கைது செய்யப்பட்டனர்.


காஷ்மீரில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறலை கண்டித்து திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட வந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர் 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறலை கண்டித்தும், இந்த பிரச்னையில் மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். உள்துறை அமைச்சர் தலைமையில் நாடாளுமன்றக்குழு அங்கு சென்று மக்களை சந்தித்து கருத்துக் கேட்க வேண்டும்.
அங்கு உயிரிழந்தோர் குடும்பம், காயமடைந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திருநெல்வேலியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சந்திப்பு பேருந்து நிலையம் அருகிலிருந்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஏ. கலீலுர்ரஹ்மான் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் பங்கேற்ற கட்சியின் மாநில கொள்கைபரப்புச் செயலர் மண்ணை செல்லச்சாமி, கொள்கை விளக்கச் செயலர் கோவைநாசர், மாவட்டப் பொருளாளர் எஸ். ஷேக் இபுராஹீம், மேற்கு மாவட்டச் செயலர் ஜெ. மீரான்மைதீன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் ஏ. ஜாஹீர்உசேன், கன்னியாகுமரி மாவட்டச் செயலர் ஹைதர்அலி உள்பட 133 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...