பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

முதல்வர் ஜெ.வை சந்திக்க கடிதம் அளித்தது உண்மை: ரங்கசாமி தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கடிதம் அளித்து உண்மை என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜூன் 2016, 6:01 am

சுஜித்குமார்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கடிதம் அளித்து உண்மை என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. இதை என்.ஆர். காங்கிரஸ் முழுவதுமாக புறக்கணித்தது. பதவியேற்பு விழா முடிந்ததும், முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் ஜெயபால், டிபிஆர் செல்வம், சந்திர பிரியங்கா, கோபிகா, அசோக் ஆனந்து, திருமுருகன், உள்ளிட்ட 7 பேர் தனியாக வந்து பேரவைத் தலைவர் அறையில் தனியாக பதவியேற்றனர். பேரவை தற்காலிக தலைவர் சிவக்கொழுந்து அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரங்கசாமி கூறியதாவது: கேள்வி: பதவியேற்பு விழாவை என்.ஆர். காங்கிரஸ் புறக்கணித்து விட்டதா ரங்கசாமி: எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் வசதிக்கு ஏற்ப பேரவை தலைவர் அறையில்தனியாக பதவி ஏற்றுக் கொண்டோம். கேள்வி: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார்

ரங்கசாமி: எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்கும் போது உங்களுக்கு தெரியவரும். கேள்வி: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கடிதம் தந்தீர்களா ரங்கசாமி: இதுகுறித்து செய்தித்தாள்களில் வந்துள்ளதே எனக்கூறினார். மீண்டும் அதுகுறித்து கேட்டபோது, ஜெயலலிதாவை சந்திக்க கடிதம் அளித்தது உண்மை தான் எனக்கூறிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.