மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

திருச்சி விமான நிலையத்தில் முதல் முறையாக ரூ. 5 கோடி போதைப் பொருள் கடத்தல்: முழு விவரங்களை தர சுங்கத்துறை மறுப்பு

முதல்முறையாக ரூ. 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற சம்வத்தை அடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரின் கவனம் திருச்சி விமான நிலையத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2016, 12:54 pm

ஆர். எஸ். கார்த்திகேயன்

முதல்முறையாக ரூ. 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற சம்வத்தை அடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரின் கவனம் திருச்சி விமான நிலையத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

திருச்சியிலிருந்து முதன்முறையாக ரூ. 5 கோடி மதிப்பிலான 8 கிலோ மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்திச் செல்ல முயன்று திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (29) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முழு விவரங்களை தரமறுத்துள்ளது சுங்கத்துறை.

தங்கம் கடத்தல் நடந்து வந்து கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் போதைப்பொரூள் கடத்தும் மையமாக திருச்சியை கடத்தல் பேர்வழிகள் தரம் உயர்த்தியுள்ளனரா என்ற சந்தேகம் மத்திய உளவுத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய உளவுத்துரை (ஐ.பி) அறிக்கை அளித்துள்ள நிலையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸôரின் கவனம் திருச்சி விமான நிலையத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

இது வரையில் திருச்சியிலிருந்து  எபிட்ரைன், கேட்டமைன், கஞ்சா உள்ளிட்ட விலை மலிவான போதைப்பொருட்கள் மட்டுமே கடத்தப்பட்டு சுங்கத்துரையினரால் பிடிபட்டுள்ளன. ஆனால் முதல் முரையாக ரூ. 5 கோடி (இது சுங்கத்துறையினர் கூறும் தொகை, ஆனால் அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகின்றது) மதிப்புள்ள 8 கிலோ எடையுள்ள மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தல் முயற்சி நடந்துள்ளது. எனவே கடத்தல் பேர்வழிகள் திருச்சியில் முகாமிட்டு கடத்தல் செய்ய திட்டமிட்டுள்ளனரா என்ற கோணத்தில் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சுங்கத்சதுறையினருக்கும் கடத்தல் சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா எனவும் உளவுத்துறையினர் தனி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட விதம், மதிப்பு, பொருளின் பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் சுங்கத்துறையினர் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. அது குறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.