முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பால் வளத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவு: தடுக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் பால் முகவர்கள் மனு 

நம் நாட்டின் பால் வளத்துறையில், பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நம் நாட்டின் பால் வளத்துறையில், பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை தியாகராயநகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி, மாநில பொதுச்செயலாளர் கே.எம்.கமாலுதீன், மாநில பொருளாளர் எஸ்.பொன் மாரியப்பன், மாநில துணைத் தலைவர்கள்  ஏ.பி.மகேஷ் காந்தி, வி.கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து, முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: பால் வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதைத் தடுப்பது, வெண்மைப் புரட்சி எனும் பெயரில் நாட்டு மாடுகளை அழித்து, கலப்பின மாடுகளை வளர்க்க ஊக்குவிப்பதைத் தடுத்து, நாடு முழுவதும் நாட்டு மாடுகள் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.மேலும் சர்வதேச அளவில் இறக்குமதி செய்யப்படும் பால் பொருள்களுக்கு தடை விதிப்பதோடு, இறக்குமதி வரியையும் அதிகப்படுத்தி, இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல் நாட்டில் உற்பத்தியாகும் பால் பொருள்களை ஏற்றுமதி செய்யவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு, எங்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினோம்.

வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி மணியளவில் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினோம்.அப்போது எங்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்று அந்த அறிக்கையில் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.