வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அனைத்து ரயில்களிலும் சுற்றுச்சூழல் கழிவறை

ரயில் நிலையப் பராமரிப்பு, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து ரயில்களிலும் சுற்றுச்சூழல் கழிவறை அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஸ்டாஜகொரி தெரிவித்தார்.

News image
Updated On :15 மார்ச் 2016, 3:20 pm

ஷேக் அப்துல்காதர்

ரயில் நிலையப் பராமரிப்பு, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து ரயில்களிலும் சுற்றுச்சூழல் கழிவறை அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஸ்டாஜகொரி தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஸ்டாஜகொரி இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பேட்டை, திருநெல்வேலி நகரம், சந்திப்பு ரயில் நிலையங்களிலும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

ரயில் நிலையங்களில் பராமரிப்பு, ரயில்வே குடியிருப்புகள், தொழிலாளர் தங்கும் அறை, ரயில்வே பாதை, ரயில் வளைவுகள், லெவல் கிராசிங் கேட் மற்றும் பாலங்களில் ஆய்வு மேற்கொண்டார். சந்திப்பு ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் கழிவறை குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் பொதுமேலாளர் பார்வையிட்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:

ரயில் நிலையங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரயில் நிலையங்களில் பிரச்னைகள் எதுவும் இல்லை. ஆய்வின்போது, ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் வேண்டும். கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.

சென்னை, திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக போர்வை, தலையணை விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரூ. 140 க்கு 2 போர்வை, ஒரு தலையணை மற்றும் ரூ. 110 க்கு 2 போர்வை விற்கப்படுகிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த வசதி படிப்படியாக தொடங்கப்படும்.

திண்டுக்கல்-மதுரை இடையிலான இரட்டை வழிப்பாதை பணி இவ்வாண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். மதுரை-வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் 2017 மார்ச்க்குள் தொடங்கும். செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் டிசம்பரில் முடிவடையும் என்றார்.

ரயில் நிலையப் பராமரிப்பு, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்களில் சுற்றுச்சூழல் கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக

ராமேஸ்வரம்-மானாமதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயிலில் இக்கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து ரயில்களிலும் சூற்றுச்சூழல் கழிவறை அமைக்கப்படும்.

தற்போது அனைத்து விரைவு ரயில்களும் 70 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். விரைவில் 90 கி.மீ வேகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.