எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உடன்குடி கருப்புக்கட்டி வரத்து அதிகரிப்புகிலோ ரூ.120 ஆக குறைந்தது!

உடன்குடி கருப்புக்கட்டி வரத்து அதிகரித்த காரணத்தால் கிலோவுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 120 க்கு விற்கப்படுகிறது.

News image
Updated On :4 மே 2016, 11:04 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி : உடன்குடி கருப்புக்கட்டி வரத்து அதிகரித்த காரணத்தால் கிலோவுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 120 க்கு விற்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, வேம்பார் பகுதியில் கருப்புக்கட்டி உற்பத்தி பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு கருப்புக்கட்டி பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதேபோல் பொள்ளாச்சி, சேலம் பகுதியில் தென்னையில் இருந்து கருப்புக்கட்டி உற்பத்தி ஆகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கருப்புக்கட்டி உற்பத்தி செய்யப்பட்ட போதிலும்,

உடன்குடி கருப்புக்கட்டி தனி மவுசு உண்டு. இங்கு உற்பத்தியாகும் கருப்புக்கட்டி தமிழகம் மட்டுமி்ன்றி பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மழை காலங்களில் கருப்புக்கட்டி உற்பத்தி முழுவதும் நிறுத்தப்படும். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 5 மாதங்கள் கருப்புக்கட்டி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும். உற்பத்தி குறையும் பருவத்தில் கருப்புக்கட்டியின் விலை அதிகரிக்கும்.

வழக்கமாக உடன்குடி கருப்புக்கட்டி கிலோ ரூ. 200 வரை விற்கப்படும். வரத்து குறையும்போது கிலோ ரூ. 300 வரை விலை அதிகரிப்பதுண்டு. கடந்த சில மாதங்களாக உடன்குடி கருப்புக்கட்டி 10 கிலோ ரூ. 1700 க்கும், வேம்பார் ரக கருப்புக்கட்டி ரூ. 1000 க்கும், ஆலந்தூர் ரக கருப்புக்கட்டி ரூ. 750 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பெருமளவில் கருப்புக்கட்டி உற்பத்தி செய்து இருப்பில் வைத்து ஆண்டு முழுவதும் வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். தற்போது உடன்குடி கருப்புக்கட்டி வரத்து அதிகரித்ததால் விலை சரிந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி உடன்குடி கருப்புக்கட்டி 10 கிலோவுக்கு ரூ. 500 குறைந்து ரூ. 1200 க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.