திருப்பூர் அருகே தேர்தல் அலுவலர் மாரடைப்பால் மரணம்
திருப்பூர் மாவட்டம், கரடுமடம் உடுமலை அருகே பள்ளி ஆசிரியர் தேர்தல் பணியில் இருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், கரடுமடம் உடுமலை அருகே பள்ளி ஆசிரியர் தேர்தல் பணியில் இருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ் (54). இவர் காங்கேயன் சட்டப்பேரவை தொகுதி வடசின்னேரிபாளையம் பஞ்சாயத்து, காங்கேயம் பகுதி தலைமை வாக்குச்சாவடி அலுவலர். இவர் தேர்தல் பணியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துணைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கிருந்து காங்கேயம்பாளையம் சம்பந்தபாளையம் பகுதியில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மீண்டும், கங்கேயம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருக்னறனர். மாற்று அதிகாரி மூலம் தொடர்ந்து அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...