47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி 2 தொகுதிகளில் முன்னிலை

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :19 மே 2016, 9:13 am

சங்கர்

நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.

ஒரு தொகுதியில் திமுக வென்றுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பூம்புகார், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

கீழ்வேளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் உ. மதிவாணின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாகை, சீர்காழி ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது.  நாகப்பட்டினம் : நாகை தொகுதியின் 13-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக (மஜக) வேட்பாளர் எம். தமிமுன் அன்சாரி 16,919 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

வாக்குகள் விவரம் : எம். தமிமுன் அன்சாரி (அதிமுக)- 53,312. எம். ஜபருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)- 36,393. சீர்காழி (தனி) : சீர்காழி தொகுதியின் 15-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி 55,673 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் கிள்ளை எஸ். ரவீந்திரனை விட 5,809 வாக்குகள் முன்னிலைப் பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் கிள்ளை எஸ். ரவீந்திரன் 49,874 வாக்குகள் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.