

மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. "சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெக்சிகோ துணைத்தூதரகம் இந்தியா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
மேலும் தென்னிந்தியாவிலிருந்து சுற்றுலா மற்றும் வியாபாரம் நிமித்தமாக மெக்சிகோ செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் உதவும்."என இந்தியாவிற்கான மெக்சிகோ தூதர் மெல்பா பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் திறக்கப்பட்டுள்ள இந்த தூதகரத்தின் மூலமாக கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். எனினும் இந்த தூதரகத்தில் மெக்சிகோ செல்வதற்கான விசா வழங்கப்படாது.
மெக்சிகோ செல்ல விசா பெற விரும்புவோர் தில்லியில் உள்ள மெக்சிகோ தூதரகத்தை அணுக வேண்டும். மெக்சிகோ சார்பில் இந்தியாவில் அமைக்கப்படும் நான்காவது தூதரகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.