தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 3 பேருக்கு வயிற்றுபோக்கு
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 3 பேருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது.


புதுதில்லி: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 3 பேருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதே போன்று சாலையில் படுத்து உருளும் போராட்டத்தை நேற்று விவசாயிகள் மேற்கொண்ட போது இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் அய்யாகண்ணுவிற்கு மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தில்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 24 நாட்களாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...