தில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம் நான்கு விவசாயிகளுக்கு உடல் நலக்குறைவு
விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு


புது தில்லி: விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் 26-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு விவசாயிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மொட்டை அடித்து போராட்டம்
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் அரை நிர்வாணம், நாமம் இடுதல், திருவோடு ஏந்துதல், ஒப்பாரி உள்ளிட்ட நூதனப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை சில விவசாயிகள் அரை மொட்டையும், ஒரு பக்க மீசையும் எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த விவசாயிகள் சனிக்கிழமை முழு மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
விவசாயிகள் உடல் நலக்குறைவு
தில்லியில் தற்போது கோடை காலம் தொடங்கியிருக்கிறது. இதனால் நீர்சத்து குறைவு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவது வழக்கம். இதுபோன்ற சூழலில் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு சிலர் நீர்சத்து குறைவு, அஜீரணம் உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில், தற்போது பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 22 விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அதில் நான்கு பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறியையடுத்த பில்லாபாளையத்தைச் சேர்ந்த அகிலன், தஞ்சாவூரை சேர்ந்த முருகன், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சையை சேர்ந்த ஏ.சி. பழனிச்சாமி, பெரம்பலூர் மாவட்டம் பெருமாள் ஆகிய நான்கு பேருக்கு அடுத்தடுத்த உடல் நலக்குறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை வாகனம் வரவழைக்கப்பட்டு ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...