இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாடு முழுவதும் இந்தியை 8-ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

நாடு முழுவதும் இந்தியை 8ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அஸ்வின்குமார் உபாத்யாயா ..

News image
Updated On :14 ஏப்ரல் 2017, 1:28 pm

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் இந்தியை 8ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அஸ்வின்குமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாரதீய ஜனதா மூத்த தலைவர் அஸ்வினிகுமார் உபாத்யாயா நாடு முழுவதும் இந்தியை 8-ம் வகுப்பு வரையில் கட்டாய பாடமாக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்து உள்ளார். 

மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்தி மொழியை பள்ளியை பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வவ்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாடு முழுவதும் இந்த கொள்கை கடைபிடிக்கப்படுவதில்லை.

இருப்பினும், இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியை ஒரு அலுவல் மொழியாக மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, தேசிய மொழியாக அல்ல என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தி வருகின்றன.  

இந்நிலையில், 1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மும்மொழி கொள்கையின் அம்சங்களை சுட்டிக் காட்டி நாடு முழுவதும் இந்தியை 8-ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அஸ்வின்குமார் உபாத்யாயா உத்தநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த மனுவில் நீதித்துறையில் இருப்பவர்கள்கூட பெரிய அளவில் மொழிப் பிரச்சனையை சந்திக்கின்றனர், மொழிப் பிரச்சனைக்கான தீர்வு இந்தியை கட்டாய பாடமாக்குவதாகத்தான் இருக்கும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தி மொழியை பயில்வது விருப்பத்திற்கு ஏற்றது என்பது சரியானதாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.