முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார்.


சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார். பின்னர் சட்டப்பேரவை செயலாளர் ஜாமாலுதீனை விஜயபாஸ்கர் சந்தித்துப் பேசினார்.
முதல் அமைச்சருடனான சந்திப்பு வழக்கமான ஒன்றுதான். மருத்துவ இடஒதுக்கீடு குறித்து முதல் அமைச்சருடன் பேசியதாகவும், இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலாளரை சந்தித்துப் பேசியதாகவும், இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவை, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தம்பிதுரை பேசினார். தம்பிதுரை சந்தித்து திரும்பியதும், எடப்பாடி பழனிச்சாமியை விஜயபாஸ்கர் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...