ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு: ராஜஸ்தான் மாணவர் சாதனை
ஐஐடி, ஐஐஎஸ்சி, என்ஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒங்கிணைந்த நுழைவுத் தேர்வில் 360-க்கு 360 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவர் சாதனை படைத்துள்ளார்.


சென்னை: ஐஐடி, ஐஐஎஸ்சி, என்ஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒங்கிணைந்த நுழைவுத் தேர்வில் 360-க்கு 360 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவர் சாதனை படைத்துள்ளார்.
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.
இதற்கு நாடு முழுவதும் மொத்தம் 11 லட்சம் பேர் பதிவு செய்து, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர். இவர்களில் தகுதிபெற்றோர் பட்டியல் இன்று இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கம்பவுன்டரின் மகன் கல்பீத் வீர்வால் என்ற மாணவர் 360-க்கு 360 மதிப்பெண்கள் பெற்று முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...