ஊழலற்ற நிர்வாகத்துக்கு மத்திய அரசு லோக்பால் அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு லோக்பால் அமைப்பை கால தாமதம் செய்யாமல் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பதால் லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மக்களவையில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியின் தலைவரை நியமிக்கலாம் அல்லது சட்டத்திருத்தம் கொண்டு வரலாம். ஆனால் சட்டம் இயற்றப்பட்டு மூன்றாண்டுகள் ஆன பிறகும் கூட லோக்பால் அமைப்பை உருவாக்காமல் காரணம் கூறுவது ஏற்புடையதல்ல.
ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நலன் கருதி லோக்பால் அமைப்பை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் மாநிலத்தில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் நடைபெற லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்க வேண்டும்.
பொது மக்கள் நலன் காக்கவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் லோக்பால், லோக் ஆயுக்த ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசர, அவசியம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

