கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுகவை பிளவு படுத்தி ஆட்சியை  பிடிக்க நினைக்கிறது திமுக - கோகுல இந்திரா பேச்சு

வீண் வதந்திகளை சமூக வலை தளங்களில் பரப்பி குழப்பம் விளைவித்து, அதிமுகவை பிளவுபடுத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது திமுக என்றார் கோகுல இந்திரா.

Updated On :18 ஜனவரி 2017, 12:34 pm

வீண் வதந்திகளை சமூக வலை தளங்களில் பரப்பி குழப்பம் விளைவித்து, அதிமுகவை பிளவுபடுத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது திமுக என்றார் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினவிழா கூட்டம் திருச்சி உறையூர் குறத் தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. உறையூர் பகுதி செயலாளர் என்.எஸ். பூபதி தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மேலும் பேசுகையில், தற்போது ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தினரின் அல்லது அவர்களது குடும்பத்தின் சமூக வலைதள அவதூறு பிரச்சாரங்களே காரணம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா எப்படி சோதனைகளைச் சந்தித்து வெற்றி பெற்றோரோ அது போலவே சின்னம்மா சசிகலாவும் வெற்றி பெறுவார்.

தேர்தலைச் சந்திக்காமலேயே அதிமுகவை பிளவுபடுத்திó, குழப்பம் விளைவித்து வீண் வதந்திகளை சமூக வலை தளங்களில் பரப்பி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது திமுக. அஇஅதிமுகவின் தொண்டர்களும், மூத்த முன்னோடிகளின் கோரிக்கைகளால் தான் பொதுச்செயலாளர் பதவி ஏற்றிருக்கிறார் சின்னம்மா சசிகலா. எனவே ஜெயல லதாவின்  நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அஸ்திரங்களாக நாம் மாறுவதே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் உறுதி ஏற்பாக இருக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.