திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது
திருச்சி : திருச்சியில் கடநத 5 நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு தடைக்கு ஏதிரான போராட்டம் திங்கள்கிழமை


திருச்சி : திருச்சியில் கடநத 5 நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு தடைக்கு ஏதிரான போராட்டம் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிற்பகல் 2 மணியளவில் கலைந்து சென்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் அறவழிப்போராட்டம் மேற்கொண்டனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும் போராட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி 18-ம் தேதி காலை திருச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், மாவட்ட ஆட்சியரகம் மற்றும் திருச்சி அண்ணா சிலை மற்றும் எம்ஜிஆர் சிலை ஆகிய பகுதிகளில் போராட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் அனைத்து இடங்களிலும் ஈடுபட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை பகுதியில் ஒன்று திரண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு பகலாக 23-ம் தேதி காலை வரையில் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் 22-ம் தேதி அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை விலக்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்து, புதுக்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
22-ம் தேதி இரவு போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என சில தரப்பினரும், போராட்டம் தொடரும் என சில தரப்பினரும் அறிவித்தனர். இதனையடுத்து பதற்றம் நிலவியது. அவசரச் சட்டம் தேவையில்லை, நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 23-ம் தேதி காலை போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து 23-ம் தேதி காலை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸôர் போலீஸôர் போராட்டத்தை விலக்கிக்கொள்ளுமாறு வேண்டு கோள் விடுத்தனர். இதனையடுத்து மாணவர்கள் பலரும் கலைந்து சென்றனர். ஆனால் சில நூற்றுக்கணக்கானோர் மட்டும் போராட்டம் தொடரும் எனக்கூறி நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று அமர்ந்து கொண்டனர். பகல் 2 மணிவரையில் நீதிமன்ற வளாகத்துக்கள் அமர்ந்திருந்தனர்.
மாவட்ட தலைமை நீதிபதி குமரகுரு மாணவர்களிடம் வந்து பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். மாணவர்கள் மறுக்கவே, அப்படியானால் நீதிமன்ற வளாகத்துக்குள் போராடக்கூடாது, வெளியே சென்று உங்கள் போராட்டத்தை தொடருங்கள் எனக்கூறினார். இதனையடுத்து போலீஸôரும் அறிவுறுத்தினர். மாநகர துணை ஆணையர் மயில்வாகனன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினரா.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸôர் தொடர்ந்து கூறுகையில், மாணவர்கள் பெரும்பாலும் கலைந்து சென்று விட்டனர். எனவே மீதியுள்ளவர்களும் கலைந்து செல்லுமாறு கூறினார். இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் (சுமார் 100 பேர்) சாரை சாரையாக நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறினர். சத்திரம் பகுதியில் போராட்டம் செய்யப்போவதாக கூறி அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து பிற்பகல் சுமார் 2.30 மணியுடன் திருச்சியில் நடைபெற்ற போராட்டம் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...