இதே நிலை நீடித்தால் எங்களால் எடப்பாடி ஆட்சி கவிழாது... இல்ல கவிழும்: மாஃபா பாண்டியராஜன்

அதிமுக அணிகள் இணைவதில் இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி ஆட்சி கவிழும் என முன்னாள் அமைச்சரும்,
இதே நிலை நீடித்தால் எங்களால் எடப்பாடி ஆட்சி கவிழாது... இல்ல கவிழும்: மாஃபா பாண்டியராஜன்

சென்னை: அதிமுக அணிகள் இணைவதில் இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி ஆட்சி கவிழும் என முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வம் ஆதரவாளுருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தலைமைக்கு உரிமை கோரி அதன் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போர்க் கொடி, சசிகலா சிறை, எடப்பாடி பழனிசாமி முதல்வர், டிடிவி. தினகரன் துணைப் பொதுச்செயலாளர், பின்னர் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம், இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தில் லஞ்ச விவகாரத்தில் டிடிவி. தினகரன் சிறை என்று கடந்த ஆறு மாதங்களாக அதிமுகவில் நாளும் நடந்துவரும் அத்தனை பரபரப்பு காட்சிகளுக்கு மத்தியில், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற அரங்கேற்றத்தில் இரு அணியாக இருந்த அதிமுக தற்போது, பன்னீர்செல்வம், எடப்பாடி, சசிகலா, டிடிவி, தீபா அணி என நான்கு அணியாக சிதறியதுடன் தினமும் பரபரப்பான செய்திகளுக்கு வெளியாகி வருகின்றன. எது எப்படியோ, தங்களுக்கென சில எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் வைத்துள்ள அணியினர் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.

இந்நிலையில், இரு அணிகள் இணைவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைப்பட்டதாகவும், அணிகள் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த நிலையில் நடைபெற்று பேரவை நிகழ்ச்சியல் டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு. தொடர்ந்து டிடிவியை ஆதரவாளர் சந்திப்பு என நடந்து வருகின்றன.

அதிமுக எனும் கட்சிப் பெயரையும், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தெரிவித்தது. இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் சின்னத்திற்கு உரிமை கோருவது தொடர்பாக பிரமாணப் பத்திரங்களை ஜூன் 16-க்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இரு அணியினரும் தத்தமது தரப்பில் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இவை தவிர, டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அமைப்பாளர் தீபாவின் சார்பிலும் அதிமுகவுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில்,  நாள் வரை நாங்கள் ஆட்சியைக் கலைக்க மாட்டோம்... எங்களால் ஆட்சி கவிழாது... என்று கூறி வந்த ஓ. பன்னீர்செல்வம் அணியிலிருந்து, விரைவில் ஆட்சி கவிழும் என்று கருத்து வந்துள்ளது. இந்தக் கருத்தைக் கூறியுள்ளது முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன். ஆவடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாண்டியராஜன், "அணிகள் இணைவதில் இதே நிலை நீடித்தால், தமிழக அரசு விரைவில் கவிழும். அது நிகழக்கூடாது என்பதுதான் எங்களது விருப்பம். சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்துவிட்டு, இரு அணிகளும் இணைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அண்மையில் சசிகலா அணியினர் கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தனர். இச்சூழலில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வி.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் வியாழக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.

தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணியினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களில் பெருவாரியானவை போலியானவை. போலியாக கையெழுத்திடப்பட்டவை. பிரமாணப் பத்திரங்களின் உண்மைத் தன்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இந்நிலையில், நாங்கள் ஆட்சியைக் கலைக்க மாட்டோம்... எங்களால் ஆட்சி கவிழாது...' என்று கூறி வந்த ஓ. பன்னீர்செல்வம் அணியினர் 'விரைவில் ஆட்சி கவிழும்' என்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன். தனது தொகுதியான ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "அணிகள் இணைவதில் இதே நிலை நீடித்தால், தமிழக அரசு விரைவில் கவிழும். அது நிகழக்கூடாது என்பதுதான் எங்களது விருப்பம். சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்துவிட்டு, இரு அணிகளும் இணைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com