

மும்பை: 1993ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முஸ்தபா டோசா இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
முன்னதாக உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நீரிழிவு பிரச்சினைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏறப்ட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1993 ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியான டோசா, இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருந்தார். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, 2003 முதல் 2010 வரை 7 பேர் கைது செய்யப்பட்டு தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குற்றவியல் சதி மற்றும் கொலை குற்றங்களுக்காக குற்றவாளிகள் என நீதிமன்றம் ஒன்றினால் அறிவிக்கப்பட்டனர். ஏழு பேரில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த குண்டு வெடிப்பு சதிக்கு திட்டம் தீட்டி மற்றும் நிதி செலவு செய்த குற்றவாளி என அறிவிக்கப்பட்ட யாகூப் மேமன் 2015ல் தூக்கிலிடப்பட்டார். முஸ்தபா டோசா இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.