கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணை தரக்குறைவாக திட்டியதைக் கண்டித்து சாலை மறியல்

கர்ப்பிணிப் பெண்ணை செவிலியர்கள் தரக்குறைவாக திட்டியதைக் கண்டித்து, பெண் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துமனை முன் நள்ளிரவில் சாலை மறியல் மேற்கொண்டனர்.

Updated On :2 மார்ச் 2017, 11:59 am

கர்ப்பிணிப் பெண்ணை செவிலியர்கள் தரக்குறைவாக திட்டியதைக் கண்டித்து, பெண் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துமனை முன் நள்ளிரவில் சாலை மறியல் மேற்கொண்டனர்.

திருச்சி பாலக்கரை ஆலம்தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட் மனைவி ஆமலிராணி (26). நிறைமாத கர்ப்பிணியான அவர் புதன்கிழமை காலை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இரவு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக சோதனைக்கூடத்துக்கு சென்றார். அப்போது பணியிöலிருந்த செவிலியர்கள், புடவை உடுத்தாமல் சுடிதார் அணிந்துவந்தற்காக தரக்குறைவாக அமலிராணியை திட்டியதாக கூறப்படுகின்றது.

இது குறித்து அவரும் குடும்பத்தினரும் எதிர்த்து கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செவிலியர்கள் அவரை வெளியே தள்ளுமாறு காவலர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து சக நோயாளிகள் மற்றும் உறவினர்கள் செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடைவில்லை. இதனைக் கண்டித்து கர்ப்பிணிப் பெண் அவரது உறவினர்கள் உள்ளிட்ட பலரும் சேர்ந்து நள்ளிரவில் சாலை மறியல் மேற்கொண்டனர். தகவலறிந்த போலீஸôர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடச்செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.